Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

செட்டிநாடு  கோழி குழம்பு இதற்கு என்று தனி ரசிகர்கள் உண்டு நீங்கள் சாப்பிட்டிருக்கீங்களா? இல்லையா? வாங்க எப்படி  செட்டிநாடு  கோழி செய்றதுன்னு கத்துக்கலாம்.கத்துக்கிட்டு சமைச்சு சாப்பிட்டு பாருங்க!! அப்புறம் நீங்களும் ரசிகர்கள் தான். என்ன ரசிகர் ஆக ரெடியா?

 

 தேவையான பொருள்கள்:-

  •  கோழி – 1 கிலோ
  • கிராம்பு 2
  • பட்டை – 2
  • சீரகத்தூள் – 1 ஸ்பூன்
  • சோம்புத்தூள்- 2 ஸ்பூன்
  • மஞ்சள்தூள்- 1/2 ஸ்பூன்
  • மிளகாய்த் தூள்- ஒன்றரை ஸ்பூன்
  • மல்லித்தூள் இரண்டு ஸ்பூன்
  • முந்திரிபருப்பு – நூறு கிராம்
  • தேங்காய் – 1 மூடி
  • உப்பு – தேவையான அளவு
  • இஞ்சி/பூண்டு விழுது – 2 ஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் – 4
  • தக்காளி – 250 கிராம்
  • பெரியவெங்காயம் – 250 கிராம்
  • எண்ணெய் – 250கிராம்

முதலில் மசாலாவை அரைத்துக் கெள்ளவும்

மஞ்சள் தூள் அரை ஸ்பூன், சீரகத்தூள் ஒரு ஸ்பூன், சோம்புத்தூள் ஒரு ஸ்பூன், மல்லித்தூள் இரண்டு ஸ்பூன், மிளகாய்த் தூள் ஒன்றரை ஸ்பூன், தேங்காய், கசகசா,முந்திரிபருப்பு நூறு கிராம் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
 

 செய்முறை;-

  •  அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி சோம்பு, பட்டை,  மிளகாய் முதலியவற்றை போட்டு வதக்கவும்.  அத்துடன் வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்.
  • இப்போது இஞ்சி, பூண்டு விழுது, தக்காளி ஆகியவற்றைப் போட்டு அதனுடன் (சுத்தம் செய்து நறுக்கிய)  கோழியை சேர்த்து வதக்கவும்.
  • நன்கு வதங்கியவுடன் அரைத்த மசாலாவை சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி நெருப்பைகுறைத்து வைத்து நன்கு வேகவிட்டு இறக்கவும்.சுவையான செட்டிநாடு  கோழி குழம்பு தயார்.

கேரளா இறால் கறி

prawn-curry

புரோட்டீன் சத்து உள்ள ஒரு உணவுப் பொருள் தான் இறால். சளிக்கு மிகவும் உகந்தது. மீனைவிட சுவையான (சத்தாண) உணவு சமைத்துப் பாருங்கள் அதன் சுவை நாக்கை விட்டுப்போகாது ஒட்டிக்கொள்ளும்.

தேவையான பொருட்கள்;-

 

  • இறால் – 250 கிராம்
  • தேங்காய் 1 மூடி
  • வெங்காயம் 100 கிராம்
  • தக்காளி 100 கிராம்
  • இஞ்சி,பூண்டு விழுது 1 ஸ்பூன்
  • எலுமிச்சம் பழம் – 2
  • பச்சைமிளகாய் 5
  • எண்ணெய் தேவைக்கு
  • உப்பு தேவைக்கு

செய்முறை;

  • முதலில் நன்கு கழுவிய இறாலை எலுமிச்சம் பழச்சாற்றில் ஊற வைக்கவும்.தேங்காய்ப் பால் [முதல் பால்] பிழிந்து வைத்துக் கொள்ளவும்.
  • தக்காளியை கொதிக்கும் நீரில் போட்டு வைத்து,சிறிது நேரம் கழித்து தோல் உரித்து பிசைந்து வைத்துக் கொள்ளவும்.(நறுக்கியும் போடலாம்)
  • பின்பு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், பச்சைமிளகாய் வதக்கவும்.அத்துடன் இஞ்சி பூண்டு விழுதைப் போட்டு பச்சைவாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.
  • பின்பு இறாலையும் சேர்த்து வதக்கிய பின்பு அதில் பிசைந்து வைத்து இருக்கும் தக்காளியை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
  • அத்துடன் தேங்காய்ப் பால் ஊற்றி தேவையான உப்பையும் அதில் சேர்த்து இறால் வேகும் வரை நன்கு சமைக்கவும் பின்பு இறக்கி மேலாக கொத்தமல்லி தழையை தூவவும்..சுவையான கேரளா இறால் கறி தயார்.
  • கேரளா இறால் கறியை தோசை,இட்லி,ஆப்பம்,சாதத்துடன் பரிமாறலாம் சுவையாக இருக்கும்.

கறிவேப்பிலை சாதம்

curry_leaves

கறிவேப்பிலை பற்றி நான் என்ன சொல்ல அது இன்றி நமது சமையல் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும்,சத்தாண உணவு பொருட்களில் கறிவேப்பிலைக்கு என்று தனி இடம் உண்டு என்பது மறுக்க முடியாத உண்மை,கீரையை ஒதுக்குவது போல் கறிவேப்பிலையையும் தான் நம்மில் பலர் ஒதுக்குகிறோம். தாளிக்க மட்டும் பயன் படுத்தாமல் சாதம், துவையல், சட்டினி  என்று பலவிதமாக  செய்து அதன் பயனை பெறவேண்டும். இன்று சத்தாண கறிவேப்பிலை சாதம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

karuveppilai

தேவையான பொருட்கள்

  • அரிசி – 1/2 கிலோ
  • கறிவேப்பிலை – ஒரு கப்
  •  கடலைப்பருப்பு – 2 ஸ்பூன்
  • மிளகுத்தூள் – ஒரு ஸ்பூன்
  • கடுகு – தாளிக்க
  • உளுத்தம்பருப்பு தாளிக்க
  • முந்திரிப்பருப்பு – 10 கிராம்
  • நெய் – தேவைக்கு
  • உப்பு – தேவைக்கு

செய்முறை

karuveppilai-rice

  •  சிறிதளவு நெய்யில் கறிவேப்பிலையை வறுத்து பொடி செய்து கொள்ளவும். அரிசியை சாதமாக வடித்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.
  • அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து நெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து.அதனுடன் முந்திரிப் பருப்பு, கடலைப்பருப்பு ஆகியவற்றைச் சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.
  • பாத்திரத்தில் உள்ள சாதத்தில் கறிவேப்பிலைத்தூள், வறுத்த முந்திரி மற்றும் கடலைப்பருப்பு, மிளகுத்தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கிளறினால் சுவையான [சத்தாண] கறிவேப்பிலை சாதம் ரெடி

ப்ரைடு ரைஸ்

fried-rice

வீட்டில் உள்ள பெண்கள் ஊருக்கு போயிட்டா சாப்பாட்டுக்கு என்ன செய்றது உடனே ஹோட்டல் தன் ஞாபகத்துகு வரும் இனி வேண்டாமே நீங்கள் ஹோட்டல்களில விரும்பி சாப்பிடும் உணவான ப்ரைடு ரைஸ் மிகவும் எளிமையான உணவு முறைதான் அதை வீட்டிலேயே செய்யலாம்.

தேவையான பொருட்கள்;-

  • அரிசி – கப்
  • கோஸ் – 100 கிராம்
  • கேரட் – 100 கிராம்
  • பீன்ஸ் – 100 கிராம்
  • வெங்காயம – 2
  • கொட மிளகாய் – 1
  • எண்ணெய் – தேவையான அளவு
  • அஜினோமோட்டோ – ஒரு ஸ்பூன்
  • பச்ச மிளகாய் – 3
  • மிளக தூள் – 3 ஸ்பூன்
  • இஞ்சி, பூண்டு விழுது  –  1 ஸ்பூன்
  • முந்திரி  –  4
  • கொத்துமல்லி

செய்யும முறை

  • சாதத்த பாதி வெந்த நிலையில் வடித்து ஆறவைத்துக் கொள்ளுங்கள்.

  • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு அது பாதி வதங்கியதும் இஞ்சி,பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும்.

  • பச்சை வாசனை போக வதக்கியதும் நறுக்கி வைத்துள்ள கோஸ், கேரட், பீன்ஸ், கொடைமிளகாய் என அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

  • சிறிது நேரத்தில் அதில் அஜினமோட்டோ, சோயா சாஸ், சிறிது மிளகு தூள்   அத்துடன்  தேவையான உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

  • இந்த கலவையில் வடித்து வைத்திருக்கும் சாதத்தை கொட்டி நன்கு கிளறி விடவும். (ஒரு 5 நிமிடம் மூடி வைக்கவும்)

  • அடுப்பில் இருந்து இறக்கும் போது முந்திரி, கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

  • சுவையான ப்ரைடு ரைஸ தயார்.  தக்காளி சாஸ் வச்சு ஒரு வெட்டு வெட்டுங்க அப்புறம் பாருங்க ஹோட்டலை மறந்துடுவிங்க.

palak1  

கீரைங்கிற  பேரைக்கேட்டாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வெறுக்கிற ஒரு  உணவு பெருள் இதற்க்கு காரணம் என்ன என்று  பார்த்தால் கீரைபெரியல், கீரைபருப்பு, என்று எப்பப்பார்த்தாலும் ஒரே மாதிரி சமைச்சா என்ன செய்றது அவுங்களும் பாவம் இல்லையா சரி பாவம் பார்த்து சத்தாண கீரையை ஒதுக்க முடியுமா? கண்டிப்பா முடியாது so அவங்களுக்கு பிடிச்ச மாதிரி செய்ய கத்துக்க வேண்டியது நம்ம கடமை இல்லையா? பாலக் மும்பை மக்களிடம் இருந்து பிரிக்க முடியாத ஒரு உணவு. இதில் நாம் பாலக்கீரை சாதம் செய்வோம் மிகவும் சுவையான அதேநேரத்தில் சத்தாண உணவும் கூட இத மட்டும் செய்து கூடுத்து பாருங்க அதுக்கு அப்புறம் அம்மா கீரை சாப்பாடு வேண்டும் என்று உங்களை சுத்தி சுத்தி வருவாங்க. இதனை எளிதில் செய்து விடலாம். என்ன சுவையான பாலக்கீரை சாதம் செய்ய ரெடியா?  

 தேவையான பொருள்கள்:- 

  •  பாலக் கீரை 2 கட்டு பொடியாக நறுக்கியது
  •  பாசுமதி அரிசி 3 கப்
  •  மிளகாய் தூள் 1 ஸ்பூன்
  •  மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
  •  தனியா தூள் 1 ஸ்பூன்
  •  கிராம்பு, ஏலக்காய், பட்டை 3 நம்பர்
  •  சின்ன வெங்காயம் 1 கப் பொடியாக நறுக்கியது
  •  தக்காளி  – 1 பொடியாக நறுக்கியது
  •  இஞ்சி பூண்டு விழுது – 1ஸ்பூன்
  •  பச்சை மிளகாய் 4 நம்பர்
  •  நெய் – தேவையான அளவு
  •  முந்திரி – 3 நம்பர்
  •  உப்பு – தேவையான அளவு
  •  வெந்தயம் – 1ஸ்பூன்
செய்முறை:-
 
palakrice22  

  • முதலில் பாசுமதி அரிசியை 1மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்பு குக்கரில் அரிசியை போட்டு தேவையான தண்ணீர் மற்றும் சிறிது உப்பு சேர்த்து 1விசில் வரும் வரை வேகவிடவும். 
  • வெந்தயத்தை வாணலியில் சிவக்க வறுத்தெடுத்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் நெய் ஊற்றி காய்ந்ததும் கிராம்பு, பட்டை, ஏலக்காய் சேர்த்து வதக்கவும். அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி பூண்டு விழுது ,தக்காளி ஆகியவற்றை சேர்த்து பொன்நிறமாக மாறும் வரை வதக்கிக் கொள்ளவும். 
  • நன்கு வதக்கிய பின்பு அதனுடன் பொடியாக நறுக்கிய பாலக்கீரையை அதில் சேர்த்து பச்சைவாசனை போகும் வரும் வரை வதக்கவும்.
  • அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியாத் தூள் சிறிது உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும்.
  • வதக்கிய பின்பு வேகவைத்த சாதத்தை அதில் சேர்த்து நன்கு கிளறி அதனுடன் அரைத்த வெந்தயத்தையும் சேர்த்து 5நிமிடம் குறைந்த தணலில் வேக விடவும்.
  • சுவையான பாலக் புலாவ் தயார். இதனுடன் காரட், வெள்ளிரிக்காய்,வெங்காய தயிர் பச்சடி செய்து சாப்பிடலாம் சுவையாக இருக்கும். நீங்களும் செய்து சாப்பிட்டு பாருங்கள்.
  •  குறிப்பு:- இதனுடன் உருளைக்கிழங்கு சேர்த்தால் இன்னும் சுவையாக இருக்கும்
  •  குறிப்பு:-  பாலக்கீரை- உடலுக்கு வலுவூட்டும், மலச்சிக்கலைப் போக்கும். குளிர்ச்சியை தரும். குடல் நோய்களுக்கு நல்லது.

செட்டிநாடு சமையல் என்றால் மிகவும் சுவையாக இருக்கும் அதே நேரத்தில் ஆரோக்கியாமன உணவாகும் இருக்கும் அதுவும் வெள்ளை பணியாரம் என்றால் அனைவருக்கும் பிடிக்கும்.நீங்களும் செய்து ருசியுங்கள்?

vellaipaniyaram

தேவையான பொருள்கள்

 

  • பச்சரிசி 4 கப்
  • உளுத்தம் பருப்பு 1 கப்
  • பால் கால் கப்

  • உப்புசிறிது

செய்முறை:

  • அரிசியையும், உளுந்தினையும் சுமார் 3 மணி நேரம் ஊறவிடுங்கள்.
  • அதன் பிறகு நீரை வடித்து, இரண்டையும் சேர்த்து மாவாய் அரைத்துக் கொள்ளுங்கள். மாவு கொஞ்சம் கெட்டியாக இருக்கவேண்டும்.
  • இத்துடன் பால், சோடா உப்பு மற்றும் உப்பு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு நன்கு கலக்கிக் கொள்ளுங்கள்.
  • சட்டியை அடுப்பில் வைத்து, கால் சட்டி அளவிற்கு எண்ணெய் ஊற்றி, சூடேறியதும் ஒரு கரண்டி மாவு எடுத்து பணியாரமாக ஊற்றுங்கள்.
  • பணியாரம் எண்ணெய்யில் மிதக்க ஆரம்பித்ததும் திருப்பிப் போட்டு வெள்ளையாக இருக்கும் போதே எடுத்துவிடவும்.
  • பணியாரத்தை ஒவ்வொன்றாக ஊற்றி  எடுக்கவும். இதற்கு தக்காளிச் சட்னி சுவையான இருக்கும்.

 

கவனத்திற்க்கு :மாவு கொஞ்சம் கெட்டியாக வைத்து ஒரு பணியாரம் முதலில் ஊற்றி பார்த்துக் கொள்ளவும். தேவையெனில் பிறகு சிறிது நீர் சேர்த்துக் கரைத்துக் கொள்ளலாம்.

மீன்

இன்னிக்கு Sunday  எனக்கு நெ‌த்‌தி‌லி ‌மீ‌ன் குழ‌ம்பு வை‌ப்பது எ‌ப்படி எ‌ன்று சொல்லிதாங்க பாட்டி என்று கேட்டு வாங்கிய செய்முறை நான் செய்து பார்த்து ருசித்த பின் இதோ உங்களுக்காக பா‌ர்‌ப்போமா?

 பாட்டி சொன்ன பொருள்கள்:

நெத்திலி மீன் – அரைக கிலோ
புளி – இரண்டு எலுமிச்சை அளவு
எண்ணெய் – தேவையான அளவு
கடுகு – சிறிதளவு meen-kuzhambu
வெந்தயம் – சிறிதளவு
வெங்காயம் – மூன்று
இஞ்சி, பூண்டு – தேவையான அளவு
தக்காளி – மூன்று
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூ‌ன்
மிளகாய் தூள் – இரண்டு டீஸ்பூ‌ன்
தனியா தூள் – இரண்டு டீஸ்பூ‌ன்
பச்சை மிளகாய் – ஆறு
கொத்துமல்லி – ஒரு கொத்து
கறிவேப்பிலை – இரண்டு கீற்று

பாட்டி சொன்ன செய்முறை:

மீனை சுத்தம் செய்து கழுவி கொள்ள வேண்டும்.

புளியை நன்கு கரைத்து வடித்து கொள்ளவும்.

இ‌‌ஞ்‌சி, பூ‌ண்டை ‌விழுதாக அரை‌க்கு‌ம் போது அதனுட‌ன் ஒரு வெ‌ங்காய‌த்தையு‌ம் போ‌ட்டு அரை‌த்து ‌விழுதாக எடு‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.

எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, வெந்தயம், வெங்காயம், இஞ்சி, பூண்டு, வெ‌ங்காய‌ விழுது சேர்த்து வதக்க வேண்டும்.

பிறகு தக்காளி போட்டு வதக்க வேண்டும். தக்காளி வதங்கியதும் கா‌ய்‌ந்த மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி பிறகு புளி தண்ணீர் ஊற்றவு‌ம்.

கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து நன்கு கொதிக்க விட்டு இறக்குவதற்கு 5 நிமிடம் முன்பு மீனை போட்டு இறக்கவும். குழ‌ம்‌பி‌ல் ‌மீனை போ‌ட்ட ‌பிறகு கர‌ண்டியை வை‌த்து ‌வேகமாக‌க் கிள‌‌ற‌க் கூடாது. சுவையான நெத்திலி மீன் குழம்பு தயா‌ர்.

 எங்க பாட்டி நெத்திலி மீன் குழம்பு எப்படி ? ருசியா இருக்கும் நீங்களும் செய்துபார்த்துட்டு சொல்லுங்க சரியா

 

காய்கறி சூப்

குழ‌ந்தைகளு‌க்கு ச‌த்தாண உணவாகவு‌ம், அதே சமய‌ம் அவ‌ர்களு‌க்கு ‌பிடி‌த்த வகை‌யிலு‌ம் கொடு‌ப்பத‌ற்கு இ‌ந்த கா‌ய்க‌றி சூ‌ப் ச‌ரியான தே‌ர்வாக இரு‌க்கு‌ம். செ‌ய்யவு‌ம் ‌மிகவு‌ம் எ‌ளிதானது. இ‌தி‌ல் புதுமைகளை கையாள வே‌ண்டியது உ‌ங்களது சா‌ம‌ர்‌த்‌திய‌ம்.
vegetables

தேவையான பொருள்கள்:

கோஸ் – 50 ‌கிரா‌ம்
பீன்ஸ் – 50 ‌கிரா‌ம்
கேரட் – 50 ‌கிரா‌ம்
சோளமாவு – 3 தே‌க்கர‌ண்டி
உப்புதேவையான அளவு
வெண்ணெய் – ஒரு தே‌க்கர‌ண்டி
பட்டை லவுங்கம் – ‌சி‌றிதளவு
பிரியாணி இலை – ‌சி‌றிதளவு
மிளகு தூள் – 2 தே‌க்கர‌ண்டி
வெங்காயம் – 1
தக்காளி – 1
கொத்தமல்லி 

செய்முறை:

வெண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, லவுங்கம், பிரியாணி இலை, வெங்காயம் போட்டு, பிறகு தக்காளி சேர்த்து வதக்க வேண்டும்.

வெ‌ங்காய‌ம், த‌க்கா‌ளி ந‌ன்கு வத‌ங்‌கியது‌ம் காய்கறிகளை ஒ‌ன்ற‌ன் ‌பி‌ன் ஒ‌ன்றாக சேர்த்து லேசாக வத‌க்கவு‌ம்.

பி‌ன்ன‌ர் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு நன்கு வேகவை‌க்கவு‌ம்.

காய்கறிகள் வெந்ததும் மூன்று தே‌க்கர‌ண்டி சோளமாவை தண்ணீரில் கரைத்து வேகு‌ம் கா‌ய்க‌றி‌‌யி‌ல் ஊற்றி கொதிக்க விடவும். சூ‌ப் பத‌த்‌தி‌ற்கு வந்ததும் இறக்கி மிளகுத்தூள் சேர்த்து கொத்தமல்லி தூவி சூடாக பரிமாறவும்.

சுவையான காய்கறி சூப் தயா‌ர்.

மாம்பழ அல்வா

mangoமா‌ம்பழ‌மே அ‌திக ரு‌சியானதுதா‌ன். அதனை அ‌ல்வா செ‌ய்து சா‌ப்‌பி‌ட்டா‌ல்… ‌எ‌ன்ன சொ‌ல்லு‌ம் போதே நா‌வி‌ல் எ‌ச்‌சி‌ல் ஊறு‌கிறதா… செ‌ய்து பாரு‌ங்க‌ள்.

வே‌ண்டியவை

மா‌ம்பழ‌ம் – 2
சர்க்கரை – 1 கப்
பால் – 2 கப்
ஏல‌க்கா‌ய் – 2
நெய் – 1 தே‌க்கர‌ண்டி

செ‌ய்யு‌ம் முறைmango-halwa1

மாம்பழத்‌தி‌ன் தோலை ‌நீ‌க்‌கி‌வி‌ட்டு துண்டுகளாக‌ப் போ‌‌ட்டு அதனை நன்றாக மசித்துக் கொள்ளவும்.

சு‌த்தமான வா‌ய் அக‌ண்ட பாத்திரத்தில் ம‌சி‌த்த மா‌ம்பழ‌‌த்துட‌ன் சர்க்கரை, பால் கலந்து அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் கிளறுங்கள்.

கலவை பதமாக ஒட்டாமல் வரும் போது நெய் சே‌ர்‌க்கவு‌ம்.

ஏல‌க்கா‌யை ‌சி‌றிது ச‌ர்‌க்கரையுட‌ன் சே‌ர்‌த்து ‌மி‌க்‌சி‌யி‌ல் அரை‌த்து சே‌ர்‌க்கவு‌ம்.

பா‌த்‌திர‌த்‌தி‌ல் தளதளவெ‌ன்று அ‌‌ல்வா வ‌ந்தது‌ம், ‌சி‌றிது நெய் தடவிய த‌ட்டு அ‌ல்லது ‌‌‌ட்ரே‌யி‌ல் அ‌ல்வாவை ஊற்றி நன்கு ஆறிய பின்னர் துண்டுகளாக வெட்டிப் பரிமாறவும்.

உ‌ங்களு‌க்கு ‌வேறு ‌நிற‌ங்க‌ள் வே‌ண்டுமெ‌ன்றா‌ல் மா‌ம்பழ‌‌ம், ச‌ர்‌க்கரை, பா‌ல் கலவையுட‌ன் ‌‌நிற‌ப் பொடியை ‌சி‌றிது த‌ண்‌ணீ‌‌ரி‌ல் கல‌ந்து சே‌ர்‌த்து‌‌க் கொ‌ள்ளலா‌ம்.

மா‌ம்பழ அ‌ல்வா தயா‌ர்

தேவையான பொருள்கள்:

  • மட்டன் –  1/2  கிலோ
  • கேரட்      –  2
  • உருளைக்கிழங்கு –  2
  • பெரிய வெங்காயம் – 1
  • மைதா – 2  மேசைக்கரண்டி
  • பச்சைபட்டாணி – அரை கப்
  • கிராம்பு – 5
  • ஏலக்காய் – 3
  • பட்டை – சிறுதுண்டு
  • மிளாகு – 5
  • பால்      –  1/2 கப்
  • உப்பு    –  தேவையான அளவு

செய்முறை:

  • உருளைக்கிழங்கு, கேரட்டினை தோல் நீக்கி துண்டுகளாக அரிந்துகொள்ளவும். மட்டனை சுத்தம் செய்து துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் கிராம்பு, ஏலம், மிளகு, பட்டை, நறுக்கிய வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும்.
  • அதில் நறுக்கி வைத்துள்ள காய்களையும், கறியையும் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பிறகு பாலையும், மைதாமாவினையும் சேர்த்து கலந்து வேகவிடவும்.
  • அதன்பின் தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து, பச்சைபட்டாணியுடன் குக்கரில் போட்டு வேகவிடவும்.
  • வெந்ததும் இறக்கி சூடாக பரிமாறவும்.

சுவையான சைனீஸ் மட்டன் சூப்  தயா‌ர்.