பிப்ரவரி 6, 2010 MEENA KARUPPAIAH ஆல்
இன்றைய உலகில் அதிகம் பேசப்படும் ஒன்று TWITTER இதில் கணக்கு வைக்காதவர்கள் யாரும் இல்லை என்று செல்லும் அளவிற்க்கு இதில் இணைபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.
இன்றைய பிரபலங்கள் பலர் தங்களின் கருத்துக்களை (பல சர்ச்சைகளை) உலகெங்கிலும் உள்ள பலருடன் பகிர்ந்து கொள்கின்றனர் மிக விரைவாக.
இந்த வசதிகள் உள்ள காலத்தில் திருவள்ளுவர் இருந்திருந்தால் 1330 என்ன 1000000330 கூட மிக விரைவாக எழுதியிருப்பார்.
சரி Twitter-ரில் நமது திருவள்ளுவரையும் இணைத்தால் என்ன என்ற எண்ணத்தில் அவர் எழுதிய 1330 குறள்களையும் டுவிட்டரில் பதிந்துள்ளேன். http://twitter.com/THIRUKURAL1330
புதுமை இல் பதிவிடப்பட்டது | குறிச்சொல்லிடப்பட்டது அம்மா, அம்மாவின் சமையல், அறுசுவை, திருக்குறள், திருவள்ளுவர் | 6 Comments »
ஜனவரி 26, 2010 MEENA KARUPPAIAH ஆல்
வரைபடம் இல் பதிவிடப்பட்டது | குறிச்சொல்லிடப்பட்டது அம்மா, அம்மாவின் சமையல் | 2 Comments »
ஜனவரி 23, 2010 MEENA KARUPPAIAH ஆல்

தேவையான பொருட்கள்:
- காலிப்பிளவர் – 1
- பாசிப்பருப்பு – 200 கிராம்
- வெங்காயம் – 250 கிராம்
- தக்காளி – 250 கிராம்
- பச்சை மிளகாய் – 10
- சீரகத்தூள் – 1/2 ஸ்பூன்
- சோம்புத்தூள் – 1/2 ஸ்பூன்
- மஞ்சத்தூள் – 1/4 ஸ்பூன்
- சீரகம் – 1/2 ஸ்பூன்
- உப்பு – தேவைக்கு
தாளிக்க:
- வரமிளகாய் – 5
- பட்டை, இலை, மிளகு – சிறிது
- எண்ணெய் – தேவைக்கு
- கறிவேப்பிலை,கொத்தமல்லி


செய்முறை:
சூப், சைவம் இல் பதிவிடப்பட்டது | குறிச்சொல்லிடப்பட்டது அம்மா, அம்மாவின் சமையல், அறுசுவை, காலிப்பிளவர், காலிப்பிளவர் சூப் | 4 Comments »
ஜனவரி 20, 2010 MEENA KARUPPAIAH ஆல்

தேவையான பொருட்கள்;
- சிக்கன் (கொத்துக்கறி) – 250 கிராம்
- இஞ்சி , பூண்டு விழுது – 2 ஸ்பூன்
- பச்சை பட்டாணி – 1 கப்
- பட்டை,லவங்கம்,கிராம்பு – தலா 2
- தக்காளி – 2
- வொங்காயம் – 3
- பச்சை மிளகாய் – 5
- மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
- மல்லித்தூள் – 2 ஸ்பூன்
- மஞ்சள்தூள் – 1/4 ஸ்பூன்
- கரம்மசாலாத்தூள் – 1 ஸ்பூன்
- உப்பு – தேவைக்கு
- எண்ணெய் – தேவைக்கு
- கொத்தமல்லி – தேவைக்கு
செய்முறை:
-
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், கிராம்பு போட்டு தாளித்து அதில் வொங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
-
அத்துடன் பச்சைமிளகாய், தக்காளி சேர்த்து நன்கு வதக்கிய பிறகு அதில் சிக்கனை சேர்த்து நன்கு வதக்கவும்.
-
அதனுடன் பச்சை பட்டாணி சேர்த்து நன்கு வதக்கிய பிறகு மல்லித்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், காரம்மசாலாத்தூள் மற்றும் தேவையான உப்பு போட்டு நன்கு வதக்கி சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு வேக விட்டு இறக்கினால் மிகவும் சுவையான பட்டாணி சிக்கன் கைமா ரெடி.
குறிப்பு:
- சிக்கனை தனியாக வேக வைத்தும் சேர்க்கலாம்.
- காளான், உருளைக்கிழங்கு சேர்த்து செய்தால் இன்னும் சுவையாக இருக்கும்
அசைவம் இல் பதிவிடப்பட்டது | குறிச்சொல்லிடப்பட்டது அம்மாவின் சமையல், அறுசுவை, சிக்கன், பட்டாணி, பட்டாணி சிக்கன் கைமா | 4 Comments »
ஜனவரி 14, 2010 MEENA KARUPPAIAH ஆல்
பொங்கல் அன்று இரண்டு பானைகளில் பொங்கல் வைக்கப்படும் சக்கரைப்பொங்கல் மற்றும் வெண்பொங்கல் இந்த வெண்பொங்கலுக்காக வைக்கப்படுவதுதான் பலகாய்குழம்பு. பார்த்து பார்த்து பக்குவமாக வைக்கும் போது கூட சில குழம்புகள் சுவையாக இருக்காது ஆனால் உடனடியாக வைக்கப்படும் இந்தகுழம்பின் சுவை!!!!!!!!! சொன்னால் புரியாது சுவைத்தால் தான் அதன் சுவையை உணர முடியும். எனது அம்மா பொங்கல் அன்று வைக்கும் பலகாய்க்குழப்புக்கு நான் அடிமை.
தேவையான பொருட்கள்:
- மொச்சைக் காய் – 200 கிராம்
- பறங்கிக்காய் – 250 கிராம்
- கத்தரிக்காய் – 200 கிராம்
- அவரைக்காய் – 200 கிராம்
- தட்டப்பயத்தங்காய் – 200 கிராம்
- சர்க்கரை வள்ளிக்கிழங்கு – 200 கிராம்
- உருளைக்கிழங்கு – 200 கிராம்
- தக்காளி – 100 கிராம்
- சின்ன வெங்காயம் – 100 கிராம்
- ப.மிளகாய் – 10
- வரமிளகாய் – 10
- பாசிப்பருப்பு – 200 கிராம்
- மஞ்சள்த்தூள் – 1 ஸ்பூன்
- எண்ணெய் (அ) வெண்ணைய் (தேவைக்கு)
- உப்பு – தேவைக்கு
- கறிவேப்பில்லை , கொத்தமல்லி – சிறிது
காய்கள் அனைத்தையும் சுத்தம் செய்து நறுக்கிகொள்ளவும்.


செய்முறை:
-
ஒரு அகலமான பாத்திரத்தில் பாசிப்பருப்பை போட்டு பருப்பு முழ்கும் அளவிற்க்கு தண்ணீர் ஊற்றி மஞ்சத்தூள் போட்டு அடுப்பில் வைக்கவும்.
-
பருப்பு ஒரு கொதி வந்ததும் அதில் அனைத்து காய்களையும் போட்டு வேக விடவும். (காய்கள் மூழ்கும் அளவிற்க்கு தண்ணீர் இருக்க வேண்டும்)
-
காய்களை போட்ட சிறிது நேரத்தில் வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், வரமிளகாய், கறிவேப்பில்லை, உப்பு என அனைத்தையும் சேர்த்து நன்கு வேக வைக்கவும்.
-
அனைத்து காய்களும் (குழம்பு கொஞ்சம் திக்கா இருக்கட்டும்) ஒரு சேர வெந்ததும் வெண்ணையை (எண்ணெய்) ஊற்றி ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கினால் மிகவும் சுவையான பலகாய்குழம்பு தயார்.
குறிப்பு:

இந்திய வகைகள், கிராமத்து சமையல், சைவம் இல் பதிவிடப்பட்டது | குறிச்சொல்லிடப்பட்டது அம்மா, அம்மாவின் சமையல், அறுசுவை, பலகாய்குழம்பு, வெண்பொங்கல் | 2 Comments »
ஜனவரி 14, 2010 MEENA KARUPPAIAH ஆல்
கிராமங்களில் பொங்கல் அன்று காலையில் பார்ப்பவர்கள் எல்லாம் முதலில் ”””பால் பொங்கிருச்சா””” என்று தான் கேட்பார்கள் அதற்க்கு மற்றவர்கள் ”””பால் பொங்கிருச்சு””” என்று சொல்லிவிட்டு உங்களுக்கு என்று திருப்பி கேட்பார்கள். இது மிகவும் சுவையான அனுபவம். சக்கரைப் பொங்கல், வென்பொங்கல், பலகாய் குழம்பு என்று இம் மூன்றையும் செய்து கடவுளுக்கு படைத்து குடும்பத்துடன் சந்தோஷமாக உண்பார்கள். அந்தநாளில் இருக்கும் இன்பம் அந்த ஆணடு முழுவதும் இருக்கும் என்பது நம்மிக்கை. சரி நாமும் பொங்கல் வைப்போமா!!!!!!!

தேவையான பொருட்கள்:
- பச்சரிசி – 1/2 கிலோ
- பாசிப்பருப்பு – 200 கிராம்
- வெல்லம் – 1 கிலோ
- பால் – 1/2 லிட்டர்
- நெய் – 100 கிராம்
- முந்திரி – 100
- சுக்கு – சிறிது
- ஏலக்காய் – 10
- தேங்காய் – 1

முதலில் செய்யவேண்டியவை:
- அரிசியை தண்ணீர் விட்டு நன்கு கழுவி தண்ணீரை வடித்துக்கொள்ளவும்.
- பாசிப்பருப்பை ஒரு வடச்சட்டியில் (வாணலியில்) போட்டு நன்கு வறுத்துக் கொள்ளவும்.
- ஏலக்காய், சுக்கு இரண்டையும் மிக்சியில் பவுடராக அரைத்து கொள்ளவும்.
- முந்திரியை நெய்யில் வறுத்துக் கொள்ளவும்.
- தேங்காயை நன்கு துருவிக்கொள்ளவும்.

செய்முறை:
- ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீர் மற்றும் பால் சேர்த்து அடுப்பில் வைக்கவும்.
- பால் பொங்கி வரும்போது அரிசியை போட்டு நன்கு வேக விடவும். அரிசி முக்கால் பதம் வெந்ததும் பாசிப்பருப்பை சேர்த்து நன்கு வேகவிடவும்.
- அரிசியும், பருப்பும் நன்கு வெந்ததும் அதில் வெல்லத்தை சேர்த்து நன்கு கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.
- நன்கு கிளறிய பின்பு வறுத்த முந்திரி, துருவிய தேங்காய் இரண்டையும் சேர்த்து நன்கு கிளறவும்.
- அதன் பிறகு ஏலக்காய், சுக்கு பவுடரையும் சேர்த்து நன்கு கிளறவும்.
- அடுப்பில் இருந்து இறக்கும் போது நெய் ஊற்றி நன்கு கிளறி இறக்கினால் மிகவும் சுவையான சக்கரைப் பொங்கல் தயார்.
பால் பொங்கிருச்சா!!!!!!
இந்திய வகைகள், இனிப்புகள், கிராமத்து சமையல், சைவம் இல் பதிவிடப்பட்டது | குறிச்சொல்லிடப்பட்டது அம்மா, அம்மாவின்சமையல், இனிப்பு, சக்கரைப்பொங்கல், சர்க்கரை, பொங்கல் | 3 Comments »
ஜனவரி 13, 2010 MEENA KARUPPAIAH ஆல்
பால் பானைப் பொங்க! பொங்க
சீதேவி நின்னடங்க
மூதேவி முறிஞ்சோட
பொங்கலோ பொங்கல்…
பொங்கலோ பொங்கல்…..
வரைபடம் இல் பதிவிடப்பட்டது | 1 Comment »
திசெம்பர் 31, 2009 MEENA KARUPPAIAH ஆல்
வரைபடம் இல் பதிவிடப்பட்டது | 2 Comments »
Older Posts »