Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘இனிப்புகள்’ Category

கிராமங்களில் பொங்கல் அன்று காலையில் பார்ப்பவர்கள் எல்லாம் முதலில் ”””பால் பொங்கிருச்சா”””  என்று தான் கேட்பார்கள் அதற்க்கு மற்றவர்கள் ”””பால் பொங்கிருச்சு””” என்று சொல்லிவிட்டு உங்களுக்கு என்று திருப்பி கேட்பார்கள். இது மிகவும் சுவையான அனுபவம். சக்கரைப் பொங்கல், வென்பொங்கல், பலகாய் குழம்பு என்று இம் மூன்றையும் செய்து கடவுளுக்கு படைத்து குடும்பத்துடன் சந்தோஷமாக உண்பார்கள். அந்தநாளில் இருக்கும் இன்பம் அந்த ஆணடு முழுவதும் இருக்கும் என்பது நம்மிக்கை. சரி நாமும் பொங்கல் வைப்போமா!!!!!!!

 

தேவையான பொருட்கள்:

  • பச்சரிசி   – 1/2 கிலோ
  • பாசிப்பருப்பு – 200 கிராம்
  • வெல்லம்  – 1 கிலோ
  • பால்  – 1/2 லிட்டர்
  • நெய்   – 100 கிராம்
  • முந்திரி – 100
  • சுக்கு – சிறிது         
  • ஏலக்காய்  – 10
  • தேங்காய் – 1

முதலில் செய்யவேண்டியவை:

  • அரிசியை தண்ணீர் விட்டு நன்கு கழுவி தண்ணீரை வடித்துக்கொள்ளவும்.
  • பாசிப்பருப்பை ஒரு வடச்சட்டியில் (வாணலியில்) போட்டு நன்கு வறுத்துக் கொள்ளவும்.
  • ஏலக்காய், சுக்கு இரண்டையும் மிக்சியில் பவுடராக அரைத்து கொள்ளவும்.
  • முந்திரியை நெய்யில் வறுத்துக் கொள்ளவும்.
  • தேங்காயை நன்கு துருவிக்கொள்ளவும்.

செய்முறை:

  • ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீர் மற்றும் பால் சேர்த்து அடுப்பில் வைக்கவும்.
  • பால் பொங்கி வரும்போது அரிசியை போட்டு நன்கு வேக விடவும். அரிசி முக்கால் பதம் வெந்ததும் பாசிப்பருப்பை சேர்த்து நன்கு வேகவிடவும்.
  • அரிசியும், பருப்பும் நன்கு வெந்ததும் அதில் வெல்லத்தை சேர்த்து நன்கு கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.
  • நன்கு கிளறிய பின்பு வறுத்த முந்திரி, துருவிய தேங்காய் இரண்டையும் சேர்த்து நன்கு கிளறவும்.
  • அதன் பிறகு ஏலக்காய், சுக்கு பவுடரையும் சேர்த்து நன்கு கிளறவும்.
  • அடுப்பில் இருந்து இறக்கும் போது நெய் ஊற்றி நன்கு கிளறி இறக்கினால் மிகவும் சுவையான சக்கரைப் பொங்கல் தயார்.

 

பால் பொங்கிருச்சா!!!!!!

Read Full Post »

ரவா கேசரி அனைவருக்கும் தெரிந்த மிக எளிதில் செய்யக்கூடிய மிகவும் சுவையான இனிப்பு, சமிபத்தில் என் அண்ணி செய்து நான் ருசித்த ரவா கேசரியின் செய்முறை இங்கே ரவா கேசரியின் ரசிகர்களுக்காக,  விலையுயர்ந்த இனிப்புகள் எத்தனை வந்தாலும் இதற்கு இணை வேறு எதுவும் இல்லை.   

தேவையான பொருட்கள்;

rrrrkk

  •  ரவா       –   100 கிராம்
  • சர்க்கரை   –   150 கிராம் (தேவைக்கு)
  • நெய்       –   50 கிராம் (தேவைக்கு)
  • முந்திரி    –   5
  • திராட்சை   –  5
  • ஏலக்காய்    – 5
  • கேசரி பவுடர் – தேவைக்கு
  • தண்ணிர்     – 3 டம்ளர்

செய்முறை;

rrkk

rrrkkkk

ஒரு பாத்திரத்தில் ரவையை போட்டு நன்கு பொன்னிரமாக வறுத்துக் கொள்ளவும். நொய்யில் முந்திரி, திராட்சை, ஏலக்காய் போட்டு வறுத்துக் கொள்ளவும்.

வேறு ஒரு பாத்திரத்தில் தண்ணிரை ஊற்றி அத்துடன் கேசரி பவுடரையும் சேர்த்து நான்கு கொதிக்கவைக்கவும்

கொதித்த தண்ணிரில் ரவையை சேர்த்து நன்கு கிளறி விடவும், ரவை நன்கு வெந்ததும் சர்க்கரையை சேர்த்து கிளறிக் கொண்டே இருக்கவும்.

அதனுடன் நெய்யை சேர்த்து நன்கு கிளறி, வறுத்த முந்திரி, திராட்சை, ஏலக்காய் போட்டு இறக்கினால் சுவையான ரவா கேசரி ரெடி.    

Read Full Post »

wheat

கோதுமை அல்வா மிகவும் சுவையாக இருக்கும் அதே நேரத்தில் செய்வதும் மிக எளிது  செய்து பாருங்கள், உங்களுக்கு மிகவும் பிடிக்கும்.

 தேவையான பொருட்கள்

  •  சம்பா கோதுமை  – 4 கப்

  •  சர்க்கரை   –  7 கப்
  •  நெய்            – 4 கப் ( உங்கள் தேவைக்கு)
  • ஜிலேபி பவுடர் சிறிது
  • ஏலக்காய்     –  6
  • முந்திரி         – 10 கிராம்
  • திராட்சை    – 10 கிராம்
  • பாதாம்         – 10 கிராம்
  • தண்ணீர்       –  1/2   கப்
  •  பால்              –  1/4 கப் 
 செய்முறை

godumaii-halwa

·         முதலில் கோதுமையை ஒரு ஐந்து மணி நேரம்  ஊறவைக்க வேண்டும்.

·         பிறகு கோதுமையை நன்கு கழுவி ஆட்டுக்கல்லில் ( கிரைண்டர் ) ஆட்டி  பால்  எடுத்து  வைக்கவும்.

·         ஒரு வாணலியில் சர்க்கரை, தண்ணீர் இரண்டையும் சேர்த்து பாகு காய்ச்சவும். ( இரண்டு விரல்கலால் தொடும் போது கம்பிப்பதம் வர வேண்டும் )

·         பாகு காய்ந்த்தும் அதில் கோதுமைப் பாலை ஊற்றியதும் பாலையும் ஊற்றி அல்வா பதம் வரும் வரை  கிளறுங்கள்.

·         நன்கு கெட்டியானவுடன் அதில் கலருக்காக ஜிலேபி பவுடர் சேர்த்த சிறிது நேரத்தில் நெய்யை சேர்த்து கிளறுங்கள்.

·         அதன்  பிறகு நெய்யில் வறுத்த முந்திரி,  திராட்சை, ஏலக்காய், பாதாம் சேர்த்து கிளறி இறக்கி வைக்கவும்.

·         ஒரு பாத்திரத்தில் கொட்டி ஆறவைத்து நமக்கு பிடித்த வடிவில் வெட்டி பரிமாறலாம்.

சுவையான கோதுமை அல்வா ரொடி

 

Read Full Post »

apples

ஆப்பிள் அல்வா இதன் சுவைக்கு நிகரான சுவை வேறு இல்லை என்று சொல்லும் அளவிற்க்கு அப்படி ஒரு சுவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடும் ஒரு இனிப்பு வகை, அதுமட்டும் இல்லை சத்தானதும் கூட

 

வே‌ண்டியவை

 

ஆப்பிள்    3

கோதுமை மாவு  – 250 கிராம்

பால்  – 250

நெய்  – 150

சர்க்கரை  – 500 கிராம்

முந்திரி    10

பாதாம்    10

ஏலகாய் பொடி    1/2 ஸ்பூன்

கேசரிப் பவுடர்    1/2 ஸ்பூன்  

  apple-halwa

 

செ‌ய்யு‌‌ம் முறை

  • ஒரு கனமான வாணலியில் பாலை ஊற்றி அதில் ( துருவிய ) ஆப்பிளை போட்டு நன்கு வேகவிடவும்.
  • சிறிது பாலில் கோதுமை மாவை கரைத்து நன்கு வெந்த ஆப்பிள் கலவையில் ஊற்றி கேசரிப் பவுடரையும் சேர்த்து கிளறவும்.
  • அதனுடன் சர்க்கரையையும் சேர்த்து நன்கு கிளறி.
  • சிறிது இறுகியதும் அதில் நெய்யை சிறிது சிறிதாக சேர்த்து கிளறவும்
  • அல்வா பதத்திற்க்கு வந்ததும் முந்திரி, ஏலகாய் பொடி, பாதாம்  சேர்த்து கிளறி இறக்கி விடவும்.
  • ஒரு பாத்திரத்தில் கொட்டி ஆறவைத்து நமக்கு பிடித்த வடிவில் வெட்டி அத்துடன் நறுக்கிய முந்திரி, பாதாம் கொண்டு அலங்கரித்து பரிமாறவும்.

சுவையான ஆப்பிள் அல்வா தயார்

Read Full Post »

செட்டிநாடு சமையல் என்றால் மிகவும் சுவையாக இருக்கும் அதே நேரத்தில் ஆரோக்கியாமன உணவாகும் இருக்கும் அதுவும் வெள்ளை பணியாரம் என்றால் அனைவருக்கும் பிடிக்கும்.நீங்களும் செய்து ருசியுங்கள்?

vellaipaniyaram

தேவையான பொருள்கள்

 

  • பச்சரிசி 4 கப்
  • உளுத்தம் பருப்பு 1 கப்
  • பால் கால் கப்

  • உப்புசிறிது

செய்முறை:

  • அரிசியையும், உளுந்தினையும் சுமார் 3 மணி நேரம் ஊறவிடுங்கள்.
  • அதன் பிறகு நீரை வடித்து, இரண்டையும் சேர்த்து மாவாய் அரைத்துக் கொள்ளுங்கள். மாவு கொஞ்சம் கெட்டியாக இருக்கவேண்டும்.
  • இத்துடன் பால், சோடா உப்பு மற்றும் உப்பு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு நன்கு கலக்கிக் கொள்ளுங்கள்.
  • சட்டியை அடுப்பில் வைத்து, கால் சட்டி அளவிற்கு எண்ணெய் ஊற்றி, சூடேறியதும் ஒரு கரண்டி மாவு எடுத்து பணியாரமாக ஊற்றுங்கள்.
  • பணியாரம் எண்ணெய்யில் மிதக்க ஆரம்பித்ததும் திருப்பிப் போட்டு வெள்ளையாக இருக்கும் போதே எடுத்துவிடவும்.
  • பணியாரத்தை ஒவ்வொன்றாக ஊற்றி  எடுக்கவும். இதற்கு தக்காளிச் சட்னி சுவையான இருக்கும்.

 

கவனத்திற்க்கு :மாவு கொஞ்சம் கெட்டியாக வைத்து ஒரு பணியாரம் முதலில் ஊற்றி பார்த்துக் கொள்ளவும். தேவையெனில் பிறகு சிறிது நீர் சேர்த்துக் கரைத்துக் கொள்ளலாம்.

Read Full Post »

mangoமா‌ம்பழ‌மே அ‌திக ரு‌சியானதுதா‌ன். அதனை அ‌ல்வா செ‌ய்து சா‌ப்‌பி‌ட்டா‌ல்… ‌எ‌ன்ன சொ‌ல்லு‌ம் போதே நா‌வி‌ல் எ‌ச்‌சி‌ல் ஊறு‌கிறதா… செ‌ய்து பாரு‌ங்க‌ள்.

வே‌ண்டியவை

மா‌ம்பழ‌ம் – 2
சர்க்கரை – 1 கப்
பால் – 2 கப்
ஏல‌க்கா‌ய் – 2
நெய் – 1 தே‌க்கர‌ண்டி

செ‌ய்யு‌ம் முறைmango-halwa1

மாம்பழத்‌தி‌ன் தோலை ‌நீ‌க்‌கி‌வி‌ட்டு துண்டுகளாக‌ப் போ‌‌ட்டு அதனை நன்றாக மசித்துக் கொள்ளவும்.

சு‌த்தமான வா‌ய் அக‌ண்ட பாத்திரத்தில் ம‌சி‌த்த மா‌ம்பழ‌‌த்துட‌ன் சர்க்கரை, பால் கலந்து அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் கிளறுங்கள்.

கலவை பதமாக ஒட்டாமல் வரும் போது நெய் சே‌ர்‌க்கவு‌ம்.

ஏல‌க்கா‌யை ‌சி‌றிது ச‌ர்‌க்கரையுட‌ன் சே‌ர்‌த்து ‌மி‌க்‌சி‌யி‌ல் அரை‌த்து சே‌ர்‌க்கவு‌ம்.

பா‌த்‌திர‌த்‌தி‌ல் தளதளவெ‌ன்று அ‌‌ல்வா வ‌ந்தது‌ம், ‌சி‌றிது நெய் தடவிய த‌ட்டு அ‌ல்லது ‌‌‌ட்ரே‌யி‌ல் அ‌ல்வாவை ஊற்றி நன்கு ஆறிய பின்னர் துண்டுகளாக வெட்டிப் பரிமாறவும்.

உ‌ங்களு‌க்கு ‌வேறு ‌நிற‌ங்க‌ள் வே‌ண்டுமெ‌ன்றா‌ல் மா‌ம்பழ‌‌ம், ச‌ர்‌க்கரை, பா‌ல் கலவையுட‌ன் ‌‌நிற‌ப் பொடியை ‌சி‌றிது த‌ண்‌ணீ‌‌ரி‌ல் கல‌ந்து சே‌ர்‌த்து‌‌க் கொ‌ள்ளலா‌ம்.

மா‌ம்பழ அ‌ல்வா தயா‌ர்

Read Full Post »

 

கே‌ழ்வரகு உடலு‌க்கு ‌மிகவு‌ம் ‌சிற‌ந்தது. அதனை கூ‌ழ், அடை, பு‌ட்டு செ‌ய்து சா‌ப்‌பிடலா‌ம். அடை ‌சிலரு‌க்கு‌ப் ‌பிடி‌க்காது. அ‌ப்படி‌ப்ப‌ட்டவ‌ர்களு‌‌க்கு‌ம் ‌பிடி‌க்கு‌ம் வகை‌யி‌ல் அதனை இ‌னி‌ப்பாக செ‌ய்து கொடு‌க்கலா‌ம்.

தேவையான பொருட்கள் :

கேழ்வரகு மாவு – 1 க‌ப் (ராகி மாவு)
வெல்லம் – 1/2 கப்
துறுவிய தேங்காய் – 1/4 க‌ப்
ஏலக்காய் பொடி
நல்லெண்ணெய்தேவையான அளவு

செய்முறை :

வெல்லத்தை உ‌தி‌ர்‌த்து ஒரு பா‌த்‌தி‌ர‌த்‌தி‌ல் போ‌ட்டு அ‌தி‌ல் ஒரு கரண்டி அளவு தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து சூடாக்கவும்.

வெல்லம் முழுவதும் கரைந்ததும் வடிகட்டி‌க் கொ‌ள்ளவு‌ம்.

வடிகட்டிய வெல்லக் கரைசலோடு துறுவிய தேங்காய், ஏலக்காய் பொடி, கேழ்வரகு மாவு சேர்த்து கட்டி தட்டாமல் கிளறிவிடவும்.

உ‌தி‌ரியாக இருந்தால் சிறிதளவு தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு போல் பிசையவும்.

சிறிய எலுமிச்சையளவு உருண்டைகளாக உருட்டி வாழையிலையில் எண்ணெய் தடவி மெல்லிய வடைகளாகத் தட்டி சூடான தோசைக்கல்லில் நல்லெண்ணெய் விட்டு இருபுறமும் சுட்டு எடுக்கவும்.

கே‌ழ்வரகு மாவு ந‌‌ன்கு வேக வே‌ண்டு‌ம். எனவே ‌சிறு‌ந்‌தீ‌யி‌ல் ந‌ன்கு வேகவை‌த்து எடு‌க்கவு‌ம்.

சூடான, சுவையான, உடலு‌க்கு ஏ‌ற்ற இ‌னி‌ப்பு அடை தயா‌ர். குழ‌ந்தைக‌ள் ‌விரு‌ம்‌பி உ‌ண்பா‌ர்க‌ள்.

Read Full Post »

sweet-kuli-paniyaramகு‌ழி‌ப் ப‌ணியார‌ம் செ‌ய்வது ‌மிகவு‌ம் எ‌ளிது. ஆனா‌ல் சுவையோ அ‌திக‌ம். செ‌ய்துதா‌ன் பாரு‌ங்கள்

தேவையான பொருட்கள் :

பச்சரிசி – 1 கப்
அவல் – அரை கப்
வெல்லம் – ஒ‌ன்றரை கப்
ஏலக்காய் – கா‌ல் டீஸ்பூன்
நல்லெண்ணெய் – சுடுவதற்கு

செய்முறை :

  • அரிசியையும், அவலையும் தனித்தனியாக நன்றாகக் கழுவி தனியாக ஊற வைக்கவும்.
  • இர‌ண்டையு‌ம் ஒ‌ன்ற‌ன் ‌பி‌ன் ஒ‌ன்றாக த‌ண்‌ணீ‌ர் ‌வி‌ட்டு நைசாக அரைத்து பிறகு வெல்லத்தையும் போட்டு அரைக்கவும்.
  • ஏலக்காய் பொடி சேர்த்து கலந்து வைக்கவும். இ‌ட்‌லி மாவு பத‌த்‌தி‌ற்கு இரு‌க்க வே‌ண்டு‌ம்.
  • பணியார சட்டியில் நல்லெண்ணெய் விட்டு சூடாக்கி ஒவ்வொரு குழியிலும் முக்கால் பாகம் அளவிற்கு மாவை ஊற்றவும்.
  • மாவு அடிப்பகுதியில் வெந்ததும், குச்சி அல்லது ஸ்பூன் உதவியால் திருப்பி விட்டு நன்றாக வெந்ததும் எடுக்கவும்.

சுவையான ப‌ணியார‌ம் தயா‌ர்

Read Full Post »

எ‌த்தனை நா‌டகளு‌க்கு‌த்தா‌ன் அ‌ரி‌சி‌யி‌ல் பொ‌ங்க‌ல் செ‌ய்து கொடு‌ப்பது. மாறாக ஜ‌‌வ்‌வ‌ரி‌சி‌யி‌ல் பொ‌ங்க‌ல் செ‌ய்து பாரு‌ங்க‌ள். அருமையாக இரு‌க்கு‌ம்.

தேவையானவை :

ஜவ்வரிசி – 300 கிராம்
வெல்லம் – 200 கிராம்
பால் – 200 மி.லி.
நெய் – 50 கிராம்
முந்திரி பருப்பு – 10
உலர்ந்த திராட்சை – 5
ஏலக்காய் – 5

செய்முறை :

அகலமான பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதித்ததும் ஜவ்வரிசியை போடவும்.

ஜ‌‌வ்வ‌ரி‌சி நன்றாக வெந்ததும் ஏலக்காய், வெல்லம் தட்டிப் போட்டு கிளறவும். அடுப்பு நிதானமாக எரிய வேண்டும். அடி‌பி‌டி‌க்காம‌ல் ‌கிள‌றி ‌விடு‌ங்க‌ள்.

த‌ற்போது ஜ‌‌வ்வ‌ரி‌சி ந‌ன்கு கெ‌ட்டியாக ‌வ‌ந்‌திரு‌க்கு‌ம். அ‌ப்போது ‌ரு‌சி‌க்காக ‌சி‌றிது பாலையும், நெய்யையும் ஊற்றவும்.

முந்திரி, திராட்சையை நெய்யில் பொ‌ன்‌னிறமாக வறுத்து பொ‌ங்க‌லி‌ல் சே‌ர்‌க்கவு‌ம்.
அ‌வ்வளவுதா‌ன் ஜவ்வரிசி இனிப்பு பொங்கல் தயா‌ர். சூடாக சா‌ப்‌பி‌ட்டு‌ப் பாரு‌ங்க‌ள். ஜ‌வ்வ‌ரி‌சி பொ‌ங்கலு‌க்கு அடிமையா‌கி‌விடு‌வீ‌ர்க‌ள்.

Read Full Post »