Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Posts Tagged ‘மாங்காய்’

vegetables

தேவையான பொருட்கள்

  • துவரம்பருப்பு – 1 கப்
  • முருங்கக்காய் 2
  • உருளைக்கிழங்கு 3
  • கத்திரிகாய் 5
  • மாங்காய் – 1 (கிளிமூக்கு மாங்காய்)
  • பெரிய வெங்காயம் 2
  • தக்காளி – 2
  • பச்சைமிளகாய் 2
  • பூண்டு 5 பல்
  • மஞ்சள்த்தூள் – 1/2 ஸ்பூன்
  • சாம்பார்த்தூள் – 3 ஸ்பூன்
  • சீரகம் – 1/2 ஸ்பூன்
  • உப்பு – தேவைக்கு

தாளிக்க

  • எண்ணெய் 2 ஸ்பூன்
  • கடுகு,உளுந்து 1/2 ஸ்பூன்
  • வரமிளகாய் – 2
  • கறிவேப்பிலை – சிறிது
  • கொத்தமல்லி – சிறிது

sambar

செய்முறை

  • ஒரு கனமான பாத்திரத்தில் துவரம்பருப்பை (நன்கு கழுவிடவும்) போட்டு பருப்பு மூழ்கும் அளவிற்க்கு தண்ணிர் விட்டு அதனுடன் மஞ்சத்தூள், சீரகம் சேர்த்து நன்கு வேக வைக்கவும்.
  • பருப்பு முக்கால் பாகம் வெந்ததும் தக்காளி, வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு சேர்த்து ஒரு 10 நிமிடம் வேகவைக்கவும்.
  • பிறகு நறுக்கிய முருங்கக்காய், உருளைக்கிழங்கு, கத்திரிகாய், மாங்காய் போட்டு வேக வைக்கவும். ( காய் போடறதுக்கு முன்னாடி சாம்பாருக்கு தேவையான தண்ணீர் ஊற்றவும்-காய் போட்ட பிறகு ஊற்றினால் காய் சரியா வேகாது+சாம்பார் சுவையாக இருக்காது )
  • காய் வெந்ததும் சாம்பார்த்தூள் சேர்த்து அத்துடன் தேவையான உப்பு போட்டு நன்கு கொதிக்க விடவும்.

  • ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்து, வரமிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்து சாம்பாரில் கொட்டி சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்கி கொத்தமல்லி தூவினால் அவ்வளவுதான் சுவையான சாம்பார் தயார்

குறிப்பு:
  • பருப்பை குக்கரில் வேகவைத்தால் சாம்பாரின் சுவை முழுமையாக கிடைக்காது. (இது எனது கருத்து மட்டும் அல்ல அனுபவம்)
  • பாத்திரத்தில் பருப்பு சீக்கிரம் வேக வேண்டும் என்றால் பருப்பு வேகும் போது சிறிது நல்லெண்ணெய் விட்டால் போதும் பருப்பு சீக்கிரம் வெந்துவிடும்.
  • மாங்காய் சேர்ப்பதால புளி தண்ணி தேவையில்லை.
  • பொருங்காயம் தேவையென்றால் தாளிக்கும் போது சிறிது போடலாம்.

Read Full Post »