Feeds:
இடுகைகள்
மறுமொழிகள்

மட்டன் பிரியாணி

MMMBBB

நம் வீட்டில் எப்போது பிரியாணி செய்தாலும் நமது இஸ்லாமிய நண்பர்கள் வீட்டில் செய்வது போல் இருப்பது இல்லை என்ற குறை இருந்து வந்தது, அதனால் என் இஸ்லாமிய தோழியிடம் அவர்களின்  பிரியாணி  செய்முறையை கேட்டு செய்து பார்த்தேன் மிகவும் சுவையாக இருந்தது. அந்த பிரியாணி செய்முறை உங்களுக்காகவும்  

INDD 

தேவையான பொருட்கள்;-

  • அரிசி              -   1 கிலோ
  • மட்டன்           -   1 கிலோ
  • இஞ்சி             -  100 கிராம்
  • பூண்டு            -   100 கிராம்
  • தக்காளி        -  1/4 கிலோ
  • வொங்காயம்        -  1/4 கிலோ
  • பச்சைமிளகாய்   -  10
  • பட்டை               -   10
  • லவங்கம்         -   10
  • ஏலக்காய்         -   10
  • மிளகாய் தூள்     -   1 1/2 ஸ்பூன்
  • மல்லித்தூள்        -   2 ஸ்பூன்
  • தயிர்                  -   250 கிராம்
  • எலும்மிச்சை       – 1
  • புதினா                      -    1/2     கட்டு
  • கொத்தமல்லி      -  1/2     கட்டு
  • எண்ணெய்        -   50 கிராம் (தேவைக்கு)
  • நெய்              -     50 கிராம் (தேவைக்கு)
  • உப்பு              -    தேவைக்கு
  • கேசரிப்பவுடர்      -  தேவைக்கு

அரைக்க வேண்டியவை;-

இஞ்சி, பூண்டு இரண்டையும் நன்கு அரைக்கவும்.

பட்டை- 5, லவங்கம்- 5, ஏலக்காய்- 5, மிளகாய்த்தூள், மல்லித்தூள் இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்

செய்முறை;-

ஒரு பாத்திரத்தில் எண்ணெய், நெய் இரண்டையும் ஊற்றி நன்கு காய்ந்ததும் பட்டை-5, லவங்கம்-5, ஏலக்காய்-5 போட்டு அத்துடன் இஞ்சி,பூண்டு விழுதையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.

அதனுடன் கறி சேர்த்து நன்கு கிளறி அத்துடன் கறிக்கு தேவையான உப்பையும் போட்டு கிளறவும். 5 நிமிடம் கழித்து அரைத்து வைத்த மசாலாப்பவுடரையும் சேர்த்து கிளறி, வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

அத்துடன் தக்காளி, புதினா, கொத்தமல்லி, சேர்த்து கிளறி. பிறகு தயிரையும் சேர்த்து நன்கு கிளறி சிறிது தண்ணீர் விட்டு வேக விடவும்.

முக்கால் பாகம் வெந்ததும் சாதத்திற்கு தேவையான தண்ணீர் ஊற்றி அத்துடன் உப்பு, கேசரி பவுடர், எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கிளறி விட்டு ஒரு கொதி வந்ததும் அரிசியை போட்டு கிளறி விடவும்.

5 நிமிடம் கழித்து நன்கு கிளறி அரை வேக்காடு வெந்து தண்ணிர் வற்றியதும் ஒரு மூடி போட்டு அதன் மேல் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைக்கவும்.   (தம் விடவும்) இப்படி செய்யும் போது அடுப்பை குறைத்து வைக்க வேண்டும்.

கால் மணி நேரம் கழித்து எடுத்தால் சுவையான மட்டன் பிரியாணி தயார்     

ரவா கேசரி

ரவா கேசரி அனைவருக்கும் தெரிந்த மிக எளிதில் செய்யக்கூடிய மிகவும் சுவையான இனிப்பு, சமிபத்தில் என் அண்ணி செய்து நான் ருசித்த ரவா கேசரியின் செய்முறை இங்கே ரவா கேசரியின் ரசிகர்களுக்காக,  விலையுயர்ந்த இனிப்புகள் எத்தனை வந்தாலும் இதற்கு இணை வேறு எதுவும் இல்லை.   

தேவையான பொருட்கள்;

rrrrkk

  •  ரவா       -   100 கிராம்
  • சர்க்கரை   -   150 கிராம் (தேவைக்கு)
  • நெய்       -   50 கிராம் (தேவைக்கு)
  • முந்திரி    -   5
  • திராட்சை   -  5
  • ஏலக்காய்    – 5
  • கேசரி பவுடர் – தேவைக்கு
  • தண்ணிர்     – 3 டம்ளர்

செய்முறை;

rrkk

rrrkkkk

ஒரு பாத்திரத்தில் ரவையை போட்டு நன்கு பொன்னிரமாக வறுத்துக் கொள்ளவும். நொய்யில் முந்திரி, திராட்சை, ஏலக்காய் போட்டு வறுத்துக் கொள்ளவும்.

வேறு ஒரு பாத்திரத்தில் தண்ணிரை ஊற்றி அத்துடன் கேசரி பவுடரையும் சேர்த்து நான்கு கொதிக்கவைக்கவும்

கொதித்த தண்ணிரில் ரவையை சேர்த்து நன்கு கிளறி விடவும், ரவை நன்கு வெந்ததும் சர்க்கரையை சேர்த்து கிளறிக் கொண்டே இருக்கவும்.

அதனுடன் நெய்யை சேர்த்து நன்கு கிளறி, வறுத்த முந்திரி, திராட்சை, ஏலக்காய் போட்டு இறக்கினால் சுவையான ரவா கேசரி ரெடி.    

கோலம்-5

கோலம்-5

சத்து மாவு இது மிகவும் ஆரோக்கியமான ஒன்று குழந்தைகள் முதல் பொரியவர்கள் வரை அனைவரும் அருந்தலாம். இதில் நவதானியங்கள் அனைத்தும் இருப்பதால் மிகவும் சுவையாக இருக்கும். டீ, காபிக்குப் பதில் காலையும் மாலையும் அருந்தி வந்தால் வயிற்றில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளும் குணமாகும். உடலுக்குத் தெம்பூட்டும் இன்னும் எத்தனையொ நன்மைகள் உண்டு அதை நீங்கள் அருந்துவதன் மூலம் அனுபவப்பூர்வமாக உணர்வீர்கள். 

grains-pulses3

தேவையான பொருட்கள்

  • கம்பு - 100 கிராம்
  • ராகி - 100 கிராம்
  • கோதுமை - 100 கிராம்
  • பச்சஅரிசி - 100 கிராம்
  • உளுந்து - 100 கிராம்
  • பாசிப்பயறு - 100 கிராம்
  • கொள்ளு - 100 கிராம்
  • வேர்க்கடலை 100 கிராம்
  • முந்திரி - 100 கிராம்
  • பாதாம் - 100 கிராம்
  • ஏலக்காய் - 100 கிராம்
  • ஜவ்வரிசி - 100 கிராம்
  • மக்காச் சோளம் - 100 கிராம்
  • கொண்டக்கடலை - 100 கிராம்
  • பொட்டுக்கடலை - 100 கிராம்

செய்முறை

hp1

  • மேலே கூரிய அனைத்துப் பொருட்களையும் தனித்தனியாக ஒரு வாணலியில் நன்கு வறுக்கவும்.
  • வறுத்தவுடன் அனைத்தையும் ஒன்று சேர்த்து மிக்சியில் (அ) மாவு அரைக்கும் இடத்தில் கொடுத்து அரைத்துக்கொள்ளவும்.
  • மாவு ஆறிய உடன் மாவு சலிப்பானில் நன்கு சலித்து கொள்ளவும்.
  • பிறகு ஒரு பாட்டிலில் கொட்டி வைத்தால் வேவைப்படும் போது பாலில் காய்ச்சி அருந்தலாம்.

சத்துபானம் தயாரிக்கும் முறை

milk-sugar1

தேவையான பொருட்கள்

  • சத்துமாவு - 2 ஸ்பூன்
  • பால் - 2 டம்ளர்
  • தண்ணீர் - 2 டம்ளர்
  • சர்க்கரை - தேவைக்கு

செய்முறை

hd

  • ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சத்துமாவையும் சேர்த்து கட்டி படாமல் நன்கு கரைக்கவும்.
  • கரைத்த இந்த கலவையை அடுப்பில் வைத்து கட்டியாகாமல் நன்கு கலக்கவும்.
  • சிறிது நேரத்தில் பாலை ஊற்றி நன்கு கலக்கி அதனுடன் சர்க்கரையையும் சேர்த்து கலக்கி இறக்கவும்.
  • அவ்வளவு தான் சுவையான + ஆரோக்கியமான சத்துமாவு மானம் தயார்

குறிப்பு

  • வயதானவர்களுக்கு சர்க்கரை சேர்க்காமல் குடுக்கவும்.
  • சத்துபானம் திக்கா இல்லாமல் கொஞ்சம் தண்ணியா இருக்கட்டும்.
  • அதிகம் சூடாக குடிக்கக் கூடாது.

vegetables

தேவையான பொருட்கள்

  • துவரம்பருப்பு - 1 கப்
  • முருங்கக்காய் - 2
  • உருளைக்கிழங்கு - 3
  • கத்திரிகாய் - 5
  • மாங்காய் - 1 (கிளிமூக்கு மாங்காய்)
  • பெரிய வெங்காயம் 2
  • தக்காளி - 2
  • பச்சைமிளகாய் 2
  • பூண்டு - 5 பல்
  • மஞ்சள்த்தூள் - 1/2 ஸ்பூன்
  • சாம்பார்த்தூள் - 3 ஸ்பூன்
  • சீரகம் - 1/2 ஸ்பூன்
  • உப்பு - தேவைக்கு

தாளிக்க

  • எண்ணெய் - 2 ஸ்பூன்
  • கடுகு,உளுந்து 1/2 ஸ்பூன்
  • வரமிளகாய் - 2
  • கறிவேப்பிலை – சிறிது
  • கொத்தமல்லி - சிறிது

sambar

செய்முறை

  • ஒரு கனமான பாத்திரத்தில் துவரம்பருப்பை (நன்கு கழுவிடவும்) போட்டு பருப்பு மூழ்கும் அளவிற்க்கு தண்ணிர் விட்டு அதனுடன் மஞ்சத்தூள், சீரகம் சேர்த்து நன்கு வேக வைக்கவும்.
  • பருப்பு முக்கால் பாகம் வெந்ததும் தக்காளி, வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு சேர்த்து ஒரு 10 நிமிடம் வேகவைக்கவும்.
  • பிறகு நறுக்கிய முருங்கக்காய், உருளைக்கிழங்கு, கத்திரிகாய், மாங்காய் போட்டு வேக வைக்கவும். ( காய் போடறதுக்கு முன்னாடி சாம்பாருக்கு தேவையான தண்ணீர் ஊற்றவும்-காய் போட்ட பிறகு ஊற்றினால் காய் சரியா வேகாது+சாம்பார் சுவையாக இருக்காது )
  • காய் வெந்ததும் சாம்பார்த்தூள் சேர்த்து அத்துடன் தேவையான உப்பு போட்டு நன்கு கொதிக்க விடவும்.

  • ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்து, வரமிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்து சாம்பாரில் கொட்டி சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்கி கொத்தமல்லி தூவினால் அவ்வளவுதான் சுவையான சாம்பார் தயார்

குறிப்பு:
  • பருப்பை குக்கரில் வேகவைத்தால் சாம்பாரின் சுவை முழுமையாக கிடைக்காது. (இது எனது கருத்து மட்டும் அல்ல அனுபவம்)
  • பாத்திரத்தில் பருப்பு சீக்கிரம் வேக வேண்டும் என்றால் பருப்பு வேகும் போது சிறிது நல்லெண்ணெய் விட்டால் போதும் பருப்பு சீக்கிரம் வெந்துவிடும்.
  • மாங்காய் சேர்ப்பதால புளி தண்ணி தேவையில்லை.
  • பொருங்காயம் தேவையென்றால் தாளிக்கும் போது சிறிது போடலாம்.

தக்காளி ரசம்

rasam

தேவையான பொருட்கள்

மிளகு       -   1 ஸ்பூன்

சீரகம்       -   2 ஸ்பூன்

வரமிளகாய்  -  4

புளி          - சிறிது

தக்காளி      -  4

பூண்டு       - 10 பல்

மஞ்சள் தூள்   -  1/4 ஸ்பூன்

எண்ணெய்   -  1 ஸ்பூன்

உப்பு        -  தேவைக்கு

கறிவேப்பிலை சிறிது

கொத்தமல்லி  - சிறிது

   iiiiiiii  ii

செய்முறை

மிக்சியில் மிளகு, சீரகம், வரமிளகாய்-3, புளி, பூண்டு, தக்காளி என அனைத்தையும் போட்டு நன்கு அரைக்கவும்.

 

அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு ரசத்துக்கு தேவையான தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும்.

 

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்த்தும் கடுகு, மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்ததும் கலந்து வைத்த ரசக்கலவையை ஊற்றி மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

 

நன்கு கொதித்ததும் வேறு ஒரு பாத்திரத்தில் ஊற்றி தேவையான உப்பு சேர்த்து கொத்தமல்லி தூவி பறிமாறலாம்.

 

மிகவும் சுவையான தக்காளி ரசம் தயார்

கோலம்-4

கோலம்

பப்பாளி ஜூஸ்

papaya1

 

1. எளிதில் கிடைக்கக்கூடிய, மிக மலிவான விலையுள்ள பழம் பப்பாளி. பப்பாளியிலுள்ள சர்க்கரையில் பாதி குளுக்கோஸாகவும், மீதி ஃபிரக்டோஸ் (பழச் சர்க்கரை) ஆகவும் உள்ளது. பழங்களிலேயே வைட்டமின் சத்து கூடுதலாக உள்ள பழம் பப்பாளி. பழுக்கப் பழுக்க வைட்டமின் சிகூடும். பப்பாளிகளில் சர்க்கரைச் சத்தும் வைட்டமின் சியும் மிக அதிகமாக இருக்குமாம். பப்பாளியில் சிறிதளவு வைட்டமின் பி1, வைட்டமின் பி2 மற்றும் நியாசினும் உண்டு. நிறைய பருப்பு உணவை உண்டபின் பப்பாளித் துண்டுகள் சாப்பிட்டால் நன்றாகச் செரிமானம் ஆகிவிடும்.

2. பழுக்காத பச்சைப் பப்பாளித் துண்டுகள் அல்லது சாறை அருந்தினால், குடலிலுள்ள வட்டப்புழுக்கள் வெளியேறும். கல்லீரல் கோளாறுகளுக்கும் பப்பாளி மருத்துவரீதியாக உதவி சரிசெய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி உண்பது சரியான வழி. அடிவயிற்றுப் பிரச்னைகளுக்கு பப்பாளியே மிகச் சிறந்த மருந்து. வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை, மலச்சிக்கல் இவற்றுக்கெல்லாம் அருமருந்து பப்பாளி. ரத்தச்சோகைக்கு பப்பாளி நிவாரணமளிக்கும். மண்ணீரல் வீக்க சிகிச்சையில் பப்பாளி பயன்படுகிறது. மேலும், பப்பாளியிலுள்ள பப்பாயின்என்சைம்களில் ஆர்ஜினைன்என்பது ஆண்களுக்கான உயிர் உற்பத்தித் திறனை மேம்படுத்தவும், ‘கார்பின்இருதயத்திற்கும், ஃபைப்ரின் ரத்தம் உறைதலுக்கும் உதவுகின்றன.

3. இளமைப் பொலிவைக் கூட்டி வயோதிகத்தைக் கட்டுப்படுத்துவதாக பப்பாளிகளை சிறப்பித்துக் கூறுவர். உடலிலுள்ள நச்சு முழுக்க பப்பாளியால் சுத்திகரிக்கப்படுகிறது. தினமும் ஒரு டம்ளர் பப்பாளி ஜூஸ் அருந்துபவர்களுக்கு உடலில் கழிவுகளே இருக்காது. எனில், நோய்வாய்ப் படுவதற்கும் சாத்தியமில்லை. இயற்கை மருத்துவச் சிகிச்சையின் கீழ்பட்டினிச் சிகிச்சைமேற்கொள்கையில் பப்பாளிச் சாறும், வெள்ளரிச் சாறும் மாற்றி மாற்றிக் குடித்தால் உடல் கழிவுகள் நீக்கத்தில் பெரும்பயன் விளையும்.


papaya

4. பப்பாளியிலுள்ள விதவிதமான என்சைம்களின் சேர்க்கை, புற்றுநோயைக் குணப்படுத்த வல்லது. ஆண்டிபயாடிக் மருந்துகளில் சிகிச்சை பெற்றபின் ஒருவர் பப்பாளி நிறையச் சாப்பிட வேண்டும். ஏனெனில் குடல் தசைகளில் அழிக்கப்பட்டிருக்கும் நல்ல பாக்டீரியாக்களை மீண்டும் உற்பத்தி செய்வதற்கு பப்பாளி உதவும். சிறுநீரகக் கோளாறுகளுக்கும் பப்பாளி மருந்தாகும். மலச்சிக்கலுக்கும், ஆஸ்துமாவுக்கும் பப்பாளி உண்பது நல்லது.

5. முகப்பரு உள்ளவர்கள், பப்பாளித் துண்டுகளை மென்மையாக முகத்தில் தேய்க்கவேண்டும். இது முகப்பருக்களைப் போக்கி, முகச் சுருக்கங்களையும் நீக்கி, பொலிவு கூட்டும். நன்றாகப் பழுத்த பப்பாளிப் பழத்தின் விதைகள், குடல் புழுக்களை வெளியேற்ற உதவும். பப்பாளி இலைகளின் பொடி யானைக்கால் வியாதிக்கும், நரம்பு வலிகளுக்கும் மருந்தாக விளங்குகிறது. நல்ல மலமிளக்கியாகவும், பித்தத்தைப் போக்குவதாகவும் உள்ள பப்பாளி சற்றே எண்ணெய்ப் பசையாக உள்ள பழமாகும். இதுவும் உடலுக்குத் தெம்பூட்டும். இதயத்திற்கு நல்லது. மனநோய்களைக் குணமாக்குவதில் உதவும். கல்லீரலுக்கும் ஏற்றது. கணைய வீக்கத்தைக் கட்டுப்படுத்தும். சிறுநீர்க் கோளாறுகள், மலச்சிக்கல் பிரச்னைகளுக்கு அருமருந்து பப்பாளி.
 தேவையான பொருட்கள்

  • பப்பாளி பழம் -   1
  • பால்                    -   1  கப்
  • தண்ணீர்          -   2 கப்
  • சர்க்கரை          -  5 ஸ்பூன்
  • தேன்         -  1 ஸ்பூன்
  • ஐஸ் கட்டி   -  5 (தேவைக்கு)

செய்முறை

papaya-juice2

  • பப்பாளி பழம் , பால், சர்க்கரை, தேன், ஐஸ் கட்டி, தண்ணீர்  அனைத்தையும் சேர்த்து மிக்சியில் போட்டு நன்கு அரைக்கவும்.
  • சுவையான  பப்பாளி ஜூஸ் தயார்.

 

 potato-fry1 

 

தேவையான பொருள்கள்:
  • சின்ன உருளைக் கிழங்கு – 1 கிலோ
  • வெங்காயம் 100 கிராம்
  • தாளிக்க   - 4
  • மஞ்சள் தூள் 1/2  ஸ்பூன்
  • மிளகாய்த் தூள் – 2 ஸ்பூன்
  • மல்லித்தூள்  -  3 ஸ்பூன்
  • இஞ்சி,பூண்டு விழுது 1 ஸ்பூன்
  • எண்ணெய்  – தேவைக்கு
  • கடுகு,உளுத்தம் பருப்பு – தாளிக்க
  • கடலைப் பருப்பு – தாளிக்க
  • உப்பு – தேவையான அளவு
  • கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை  - சிறிது

 

செய்முறை:

 

 

உருளைக் கிழங்கை வேகவைத்து தோலுரித்து கொள்ளவும்.

 

ஒரு வாணலியில் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை, போட்டு தாளித்ததும் அதில் இஞ்சி,பூண்டு விழுது, வெங்காயம் இரண்டையும் போட்டு நன்கு வதக்கவும்.

 

அத்துடன் தக்காளியையும் சேர்த்து நன்கு வதக்கி பின் உருளைக் கிழங்கையும் சேர்த்து நன்கு கிளறவும்.

 

அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித்தூள், உப்பு என எல்லாவற்றையும்  சேர்த்து நன்கு கிளறவும்.

 

இடைவிடாது கிளறிக் கொண்டே இருக்கவும். பொன்னிறமாக இருக்க வேண்டும் கருகிவிடாமல் பார்த்துக் கொள்ளவும். சிறிது நேரம் கழித்து கொத்தமல்லித் தழை தூவிப் பரிமாறவும்.

 

சுவையான உருளைக்கிழங்கு வறுவல்

potato-fish

மீன் குழம்பு அனைவருக்கும் பிடிக்கும் அதில்  உருளைக்கிழங்கு சேர்த்து பாருங்கள் அதன் ருசி பலமடங்காகும், உருளைக்கிழங்கு மீன் குழம்பு செய்து தான் பாருங்கள்  அதன் சுவைக்கு நீங்கள் அடிமை ஆவது உறுதி உங்கள் வீட்டில் பாராட்டு கிடைப்பதும் நிச்சயம்.

தேவையான பொருட்கள்

  • மீன் – 1 கிலோ (உங்களுக்கு பிடித்த மீன்)
  • உருளைக்கிழங்கு 1/2  கிலோ
  • சின்ன வெங்காயம்     -  200  கிராம்
  • பூண்டு   -  10 பல்
  • தக்காளி    -  4
  • பச்சைமிளகாய் – 8
  • மஞ்சள்தூள்     1/2   ஸ்பூன்
  • மிளகாய்த்தூள்  -  3 ஸ்பூன்
  • மல்லித்தூள்    -  4 ஸ்பூன்
  • புளி      எலுமிச்சைபழம் அளவு
  • வெந்தயம்  - 1/2 ஸ்பூன்
  • சீரகம்   - 1/2  ஸ்பூன்
  • சோம்பு  - 1/2  ஸ்பூன்
  • எண்ணெய் –  தேவைக்கு
  • உப்பு    - தேவைக்கு
  • கறிவேப்பிலை,கொத்தமல்லி – சிறிது

செய்முறை

potato-meen-kuzhambu

மீனை சுத்தம் செய்து அதில் மஞ்சள்தூள் தடவி வைக்கவும். உருளைக்கிழங்கை தோலுரித்து நறுக்கிக் கொள்ளவும்.

 

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெந்தயம், சீரகம், சோம்பு போட்டு தாளித்து வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு மூன்றையும் சேர்த்து நன்கு வதக்கவும்.

 

வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளியையும் சேர்த்து நன்கு வதக்கி உருளைக்கிழங்கையும் போட்டு வதக்கி அத்துடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.

 

பிறகு புளிக் கரைசலை ( குழம்புக்கு தேவையான தண்ணிரை புளித்தண்ணியுடன் சேர்த்து ஊற்றவும் ) ஊற்றி தேவையான உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.

 

உருளைக்கிழங்கு வெந்து குழம்பு பக்குவத்திற்கு வந்தவுடன் மீனை போட்டு  ஒரு கொதி வந்தவுடன் கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

சுவையான உருளைக்கிழங்கு மீன் குழம்பு தயார்

பழைய பதிவுகள் »